சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் - ஏப்ரல் 02
இன்றைய நவீன Digital உலகத்தில் புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அதுவும் குழந்தைகள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கம் என்பது இல்லை என கூறலாம்.
ஆனால் அதை நாம் மாற்றவேண்டும்.
புத்தக வாசிப்பின் பயன்கள்
- தெளிவாகவும் அழகாகவும் பேச.
- எழுத்துக்களை தவறு இல்லாமல் எழுத.
- மற்றவர்களிடம் பேசும்போது சரியான எடுத்துக்காட்டுகளுடன் பேச.
- வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள.
- படிப்பதால் மூச்சு சீராகும்.
- இதயத்தின் துடிப்பு சீராகும்.
- எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக எந்த ஒரு குழப்பமும் இன்றி எடுத்துச்சொல்ல முடியும்.
- நம்மைப் பற்றிய சிந்தனை புத்தகம் படிப்பதன் விளைவாக அது தொலைநோக்குச்சிந்தனையாகும் வாய்ப்பு கிட்டும்.
- நல்லவை எவை தீயவை எவை என்று பகுத்தறியும் மனபக்குவம் கிடைக்கும்.
- நம்மிடையே இருக்கும் மேற்கத்திய கலாச்சார சாயல் முற்றிலும் மறைந்து அழிந்து போகும்.
- நம்முடைய தாய்மொழிமேல் தனி மதிப்பும் அதன் சிறப்பையும் அறிய முடியும்.