வாட்ஸ்ஆபில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இந்த அப்டேட் கிடைக்கும்.
புதிய அம்சமானது ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து Delete செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒரு பழைய மீடியா உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு வாட்ஸ்ஆப் அம்சம் ஆகும்.
முன்னதாக, போட்டோக்கள், GIF மற்றும் ஷார்ட் கிளிப்புகள் போன்ற பைல்களை நாம் டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை குறிப்பிட்ட பைல் ஆனது வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும்.
ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய முடியாது.
டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு பைலை ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து நீக்கி விட்டால் அதை மீண்டும் பெற முடியாது. ஆனால், இன்று முதல் அது சாத்தியமே. வாட்ஸ்ஆப் சேமிப்பகத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டவுன்லோட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் என்க்ரிப்ட் செய்யப்படுள்ளது.
அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுகவே முடியாது அள்ளித்தரும் வாட்ஸ்அப் விருந்து
பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது, விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்யவும், அவ்வளவு தான். இதை நிகழ்த்த தனிப்பட்ட பட்டன் ஏதும் இல்லை.
புதிய அம்சம் தவிர, வாட்ஸ்ஆப் நிறுவனம் மற்றொரு புதிய அம்சத்தையும் சோதிக்கிறது, அது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் உள்ள வாட்ஸ்ஆப் ஐகானின் வடிவம் மற்றும் அளவை தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.விரைவில் அடுத்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.