Android Banker Virus - விளக்கம் மற்றும் பாதுகாக்கும் முறை


எச்சரிக்கை
**************
வங்கிக்கணக்குகளை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ் Quick Heal தரப்பிலிருந்து கண்டறியபட்டுள்ளது. Android Banker என அழைக்கப்படும் இந்த வைரஸ் வங்கி கணக்கு செயலிகளை (Bank APP) தாக்கும் வகையில் உள்ளது. தற்போது Android Banker வைரஸ் மூலம் 234-வங்கிகளின் செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பல முன்னனி வங்கிகளும் அடங்கும்.

தாக்கும் முறை:
*****************
இந்த வைரஸ்  andridbanker A9480, A2F8K கோப்புகள் மூலம் தங்களின் Phone-ஐ தாக்குகிறது. இதன் மூலம் தாங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் செயலியின் Login Page போன்ற போலி பக்கத்தை (Fake Login Page) இது உருவாக்கி அதன் மூலம் தங்களின் User Name, Password போன்ற தகவல்களை திருடப்படுகிறது.


பாதுகாக்கும் முறை:
************************
1. Google Play Store - அல்லாது Thrid Party App-களை பயன்படுத்த வேண்டாம்.
 2. உங்கள் Phone-ல் Install UnKnown Source -ஐ Disable செய்யவும்.
3. நண்பர்கள் மூலம் பகிரப்படும் (Share) செயலிகளையும்,தேவையற்ற செயலிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
4. வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட ( Official) செயலிகளை (APP) மட்டும் பயன்படுத்தவும்.