உங்கள் பான் எண் செயல்பாட்டில் உள்ளதா? ரத்து செய்யப்பட்டதா?

 நாடு முழுவதும் 11,44,211 லட்சம் போலி பான் கார்டு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்க்வார் ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே பொது விதியாகும். அவ்வாறு வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வருமான வரி சட்டம்-1961, 272 பிரிவு-பி வழிவகை செய்கிறது.
ஒரு நபரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு இருந்தால் அதனை உடணடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பான் எண் பயன்பாட்டில் உள்ளதா? அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை பின்வரும் முறையில் தெரிந்து கொள்ளலாம்.
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/VerifyYourPanDeatils.html என்ற அரசின் இணையப்பக்கத்தில் இதனை அறிந்து கொள்ளலாம். அந்த வலைத்தளத்தினை அனுக இங்கு க்ளிக் செய்க..

Step 1 :

முதல் பக்கத்தில் உங்களின் குடும்பப் பெயர் (Surname), பெயர், பிறந்த நாள், மொபைல் எண் ஆகிய தகவல்களை அளிக்கவும்.


Step 2 :

தகவல்களை அளித்தவுடன் Submit செய்தால் OTP எண் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.
OTP எண்ணை உள்ளீடு செய்யவும்.

Step 3 :



தற்போது ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் உங்களுடைய பான் எண், அதிகார எல்லை மற்றும் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.