232-APPS Banned by Indian Government


 பயனாளர் பாதுகாப்பு (User Security) குறைவாகவும், பயனாளர் தகவல்களை(User Data) சேகரித்து அதை சீன சர்வர்களுக்கு அனுப்புவதாக கூறி 232 சீன செயலிகளை(APPS) தடை செய்தது இந்திய அரசு.

சூதாட்டம் மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட 138 செயலிகளை தடை செய்வதற்கான உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது. மேலும், அங்கீகாரமற்ற கடன் சேவையில் ஈடுபட்டுள்ள 94 செயலிகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இயக்கப்பட்டு வந்தன. அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.