Voter List Enroll

election-enroll

இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்

சிறப்பு முகாம் தேதிகள்
நவம்பர் 4 (சனி), 
நவம்பர் 5 (ஞாயிறு) 
நவம்பர் 18 (சனி), 
நவம்பர் 19 (ஞாயிறு)
ஜனவரி 1, 2024 அன்று நீங்கள் 18 வயது பூர்த்தியடைகிறீர்களா? ஆம் எனில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க இப்பொழுதே விண்ணப்பிக்கலாம்.

1. நீங்கள் புதிய வாக்காளராக இருந்தால், உங்கள் பெயரை பதிவு செய்வதற்கு.
2. இறந்த மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கு.
3. வாக்காளரின் முகவரியை புதிய வாக்குச்சாவடிக்கு மாற்றம் செய்வதற்கு.
4. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் விவரங்களை திருத்தம் செய்வதற்கு.
இறுதி வாக்காளர் பட்டியலானது
1. அனைத்து சேர்த்தல்கள், நீக்கல்கள், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுடன் 05.01.2024 அன்று வெளியிடப்படும்.
2.புதிய வாக்காளரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வாக்காளர் வழங்கிய முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

ஜனவரி 1, 2024, ஏப்ரல் 1, 2024, ஜூலை 1, 2024 மற்றும் அக்டோபர் 1, 2024 தேதியின்படி நீங்கள் 18 வயது பூர்த்தியடைபவராக இருந்தால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்.